சுல்தான் படத்தின் மூலம் கல்லா கட்டிய தயாரிப்பாளர்!

வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:18 IST)
நடிகர் கார்த்தி நடித்துள்ள சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் சொந்தமாக ரிலீஸ் செய்ய உள்ளாராம் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. 

இந்நிலையில் இந்த படத்தை மொத்தமாக 40 கோடி ரூபாய்க்கு எடுத்து அதை இதுவரைக்கும் 67 கோடி ரூபாய்க்கு மார்க்கெட் செய்துள்ளாராம் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. இதன் மூலம் ரிலிஸூக்கு முன்னரே 27 கோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு லாபம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்