டிசம்பரில் தொடங்கும் சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு இணையும் திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 3 மே 2024 (07:11 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெங்கட்பிரபு சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு என பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இப்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு வெங்கட்பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படம் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான கதையே இன்னும் முடிவாகவில்லையாம். ஆனால் அதற்குள் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என திட்டமிட்டு விட்டார்களாம். அதில் சிவகார்த்திகேயன் சம்பளம் 40 கோடியாகவும், வெங்கட்பிரபுவின் சம்பளம் 20 கோடியாகவும் இருக்கும் என திட்டமிட்டுள்ளனராம்.

கோட் படத்தின் முடிந்த பின்னர் இந்த பட வேலைகளை வெங்கட்பிரபு தொடங்குவார் என தெரிகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படம் டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்