விஜய் 69 படத்தில் இணையும் இரண்டு பிரபல ஹீரோயின்கள்& இசையமைப்பாளர்!

vinoth

ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (08:05 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது அந்த இயக்குனர் ஹெச் வினோத்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்க இருந்த டிவிவி நிறுவனத்தின் தானய்யா அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாகவும் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்ற உள்ளதாகவும் தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்