சிவகார்த்திகேயனின் கனா டீசர் இன்று வெளியீடு

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (11:06 IST)
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள படம் கானா. திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர்,  தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்து. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் இசை இன்று வெளியாக உள்ளது.
 
இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். மேலும் இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவரது மகள் ஆராதனா பாடியுள்ளார். இதன்  மூலம் சிவகார்த்திகேயனின் மகள் பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்