சிவகார்த்திகேயனின் டாக்டர் பட அடுத்த சிங்கில் ரிலீஸ் !

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (20:02 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டாக்டர் படத்தின் so babyஎன்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இப்படத்தின் அடுத்த சிங்கில் இன்று 5 மணிக்கு வெளியாகுமெனப் படக்குழு நேற்று அறிவித்தது.

அதன்படி தற்போது வெளியாகுமென ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர். ஆனால் படக்குழு சொன்னபடி தற்போது பாடல் வெளியாகவில்லை.

பின்னர் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், என் லக்கி நம்பர் 7 , அதனால்அதுக்குள்ள ரிலீஸ் பண்ணுங்க எனத் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இயக்குநர்நெல்சனுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

#SoBaby என்ற பாடல் இன்று இரவு 7 மணிக்குள் ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் உறுதி அளித்தது. அதன்படி டாக்டர் படத்தின் #SoBaby என்ற சிங்கில் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இப்பாடல் கீழே உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்