ரி ரிலீஸ் ரேஸில் இணையும் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’…!

vinoth

சனி, 15 பிப்ரவரி 2025 (13:14 IST)
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’. அந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் உருவாக்கிய ரஜினிமுருகன் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

இதையடுத்து இந்த கூட்டணி பிரிந்தது. இந்நிலையில் இப்போது இயக்குனர் பொன்ராம் இப்போது ரஜினி முருகன் 2 திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும். அதில் ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களின் கதாபாத்திரங்களை இணைத்து ‘பொன்ராம் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ ஆக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதன் பின்னர் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது ரஜினி முருகன் திரைப்படம் மார்ச் மாதம் ரி ரிலீஸ் ஆகவுள்ளதாக படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்