'ரஜினிமுருகனை அடுத்து ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (20:10 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி பெயரில் உருவான 'ரஜினிமுருகன்' திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் தற்போது ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை அடுத்த படத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.



ஆம் கடந்த 1987ஆம் ஆண்டு ரஜினி, அமலா நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேலைக்காரன்' என்ற டைட்டில்தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை உறுதி செய்த இந்த படத்தின் தயாரிப்பு நி'றுவனமான 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம், இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் மே 1ஆம் தேதி வெளிவரும் என்று அறிவித்துள்ளது. இந்த நாள் அஜித் பிறந்த நாள் மற்றும் தொழிலாளர்கள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பிராமையா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு  அனிருத் இசையமைக்கின்றார். இந்த படத்தை ஜெயம் ராஜா இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அடுத்த கட்டுரையில்