40 நாட்களில் சிவகார்த்திகேயன் படத்தை முடித்த இயக்குனர்… குவியும் பாராட்டு!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (15:39 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் – தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது. படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவர் நடிக்கிறார்.

தமிழ்நாடு, பாண்டிச்சேரி என நடந்த படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தை எதிர்பார்த்ததை விடவும் மிகவும் குறைவான நாட்களில் திட்டமிட்டதை விட குறைவான நாட்களில் முடித்துள்ளாராம் இயக்குனர். மொத்தமே 40 நாட்களில் படத்தின் ஷுட்டிங்கை முடித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்