சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (11:36 IST)
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ’கோலமாவு கோகிலா’ நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11.03 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது 
 
சிவகார்த்திகேயன் அட்டகாசமாக டாக்டர் வேடத்தில் சீட்டில் உட்கார்ந்து இருப்பதும் போன்றும், அவரது கையில் ரத்தக்கறை இருப்பது போன்றும், அவரது காலருகே டாக்டர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் சிதறிக்கிடப்பது போன்றும், இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரே இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அள
வில் ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். மேலும் வினய், யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். அன்பரிவ் சண்டைப்பயிற்சியில் கிரன் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்