அதையடுத்து நடிகர் சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் "டாக்டர்" என்ற புது படத்தில் நடிக்கவிருக்கிறார். நெல்சன் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. அடுத்ததாக தற்போது சிவகார்த்திகேயனை வைத்து "டாக்டர்" என்ற படத்தை இயக்கி வருகிறார். KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.