சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் அயலான் திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி நேற்று ரிலீஸ் ஆனது.
நேற்று கேப்டன் மில்லர், அயலான், மிஷன் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில் அயலான் படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. பொங்கல் ரிலீசில் இந்த படம் தான் வின்னர் என்று கூறப்படுகிறது. இந்த படம் நான்கு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் படத்தை மிகப்பெரிய தொகைக்கு பிஸ்னஸ் செய்துள்ளதால், இந்த வசூல் போதுமானதாக இல்லையாம். அதனால் இப்போது வசூலை எப்படியாவது ஏற்ற வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் தமிழகம் முழுவதும் தியேட்டர் விசிட் அடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் முதல் கட்டமாக திருப்பூருக்கு அவர் சென்றுள்ளாராம்.