இன்று காணும் பொங்கல்: சென்னையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்..!

Siva

புதன், 17 ஜனவரி 2024 (07:30 IST)
இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து சென்னையில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை வாகன ஓட்டிகள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த சாலையில் பொதுமக்கள் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.
 
மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும்போது போர் நினைவு சின்னத்தில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம்போல் கலங்கரை விளக்கம் நோக்கி அனுமதிக்கப்படும். 
 
கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு பாரதி சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
 
வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ALSO READ: ராமர் கோயில் திறப்பு நாளன்று என்ன செய்ய போகிறார் மம்தா பானர்ஜி: அதிரடி அறிவிப்பு!
 
ஃபோர்ஷோர் சாலை, விக்டோரியா வார்டன் விடுதி, கலைவாணர் அரங்கம் பார்க்கிங், பிரசிடென்சி கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகம், டிடி கேந்திராவிற்கு அப்பால் ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை), எம்ஆர்டிஎஸ் - சேப்பாக்கம், லேடி வெலிங்டன் பள்ளி, ராணி மேரி மகளிர் கல்லூரி, சீனிவாசபுரம் லூப் ரோடு/மைதானம், பிடபிள்யூடி மைதானம் (தலைமை செயலகம் எதிரில்), செயின்ட் பீட் மைதானம், அன்னை சத்யா நகர், ஈவிஆர் சாலை மருத்துவக்கல்லூரி மைதானம் ஆகிய இடங்கள் பார்க்கிங் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்