காணும் பொங்கலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்களின் கூட்டம் அலைமோதியது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். குடும்பம் குடும்பமாக வருகை தந்த மக்கள், பழவேற்காடு கடலில் குளித்து மகிழ்ச்சி அடைந்தனர். அங்குள்ள கலங்கரை விளக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.