கிரிக்கெட் பயிற்சியில் சிவகார்த்திகேயன் டீம்..

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (20:39 IST)
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தைச் சேர்ந்த நடிகர்கள், படப்பிடிப்புக்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
சினிமாவில் விளையாட்டு எப்போதுமே வெற்றி பெறும் ஒரு சூத்திரம். இதற்கு பல உதாரணங்கள் இருந்திருக்கிறன. அந்த படங்கள் அதிகமாக வெற்றி பெறுவதற்கு காரணம், ஒருவன் கொண்டிருக்கும் பேரார்வம் அனைத்து தடைகளையும் உடைத்து வெற்றிக்கு இட்டு செல்லும் என்ற தத்துவம் தான்.

இயக்குனராகும் பல வருட கனவில் இருந்த அருண்ராஜா காமராஜ், பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட  சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்து இருப்பது மிக பொருத்தமானது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 
 
படத்தை பற்றி அதன் இயக்குனரான அருண்ராஜா காமராஜ் கூதும்போது, "இது எனக்கு மிகவும் நெருக்கமான படம், ஏனென்றால் அது வெளிப்படுத்தும் உணர்வுகள் அப்படிப்பட்டவை. சத்யராஜ் சார், இளவரசு சார், ரமா மேடம், முனீஸ்காந்த், அறிமுக நடிகர் தர்ஷன் ஆகியோர் சம்பந்தப்பட்ட முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து இருக்கிறேன். அடுத்தகட்ட படப்பிடிப்பில் தான் கிரிக்கெட் போட்டிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அதற்காக நடிகைகளும், கிரிக்கெட் ஆடும் பெண்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மிகவும் சவாலாக இருக்கும் அந்த படப்பிடிப்புக்காக காத்திருக்கிறோம்.
 
திபு நினன் தாமஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல் ரூபன் எடிட்டிங்கில், லால்குடி இளையராஜா கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பல்லவி சிங் ஆடைகளை வடிவமைக்க, போஸ்டர்களை வடிவமைக்கிறார் வின்சி ராஜ்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்