சிவகார்த்திகேயனுடன் ஜோடி போடும் சூர்யா-கார்த்தி நாயகி

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (19:46 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்; படத்தின் நாயகி ரகுல் ப்ரித்திசிங், அதன் பின்னர் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்தார். தற்போது அவர் மீண்டும் கார்த்தியுடன் ஒரு படத்திலும், சூர்யாவின் 'NGK' படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்திலும் நடிக்க ரகுல் ப்ரித்திசிங் ஒப்பந்தமாகியுள்ளார். 'இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை சிவகார்த்திகேயனின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம்ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்