இந்த நிலையில் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக எம்.ராஜேஷ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஆனாலும் சிவகார்த்திகேயன் படத்தை எம்.ராஜேஷ் இயக்குவது உறுதி என்பது போன்ற தகவல்கள் கசிந்து வருகிறது. மேலும் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்;' படத்தின் வசனங்களை எழுதியவர் எம்.ராஜேஷ் என்பதும், எம்.ராஜேஷின் உதவியாளர் தான் இயக்குனர் பொன்ராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.