தமிழ் திரையுலகில், பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்களாக வருவது என்பது சிவாஜி கணேசன் காலம் தொட்டே வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், தற்போது பிரபல இயக்குநர் ஷங்கர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் மகன்கள் திரைத்துறையில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் அட்லியின் உதவியாளர் ஒருவர், ஷங்கரின் மகனை வைத்து இயக்கவுள்ளாராம். இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது முதல் படத்தை இயக்க, மாரி செல்வராஜ், மணிரத்னம், அருண்ராஜா காமராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவர் இயக்குநராக தேர்வு செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.