ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ பர்ஸ்ட்லுக் வெளியீடு!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (18:15 IST)
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி ’மீசைய முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறினார் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் சிவகாமியின் சபதம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மற்ற படங்களைப் போலவே சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்