சிவாஜியுடன் விஜய் நடித்த ஒரே படம்: 25வது ஆண்டு கொண்டாட்டம்!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (18:25 IST)
சிவாஜியுடன் விஜய் நடித்த ஒரே படம்: 25வது ஆண்டு கொண்டாட்டம்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் தளபதி விஜய் நடித்த ஒரே திரைப்படமான ஒன்ஸ்மோர் என்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டன 
 
கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி அதாவது இதே நாளில் சிவாஜி கணேசன் விஜய் சிம்ரன் நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார்.
 
 இந்தப்படம் சென்டிமெண்ட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுடன் கூடிய சிறப்பான படமாக அமைந்தது என்பதும் சிவாஜியுடன் விஜய் நடித்த ஒரே திரைப்படம் என்ற பெருமையை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றுடன் இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து சிவாஜி கணேசன் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை கொண்டாடி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்