பிரசாந்தை ஓவர்டேக் பண்ணினாரா சிம்ரன்… அந்தகன் படம் பார்த்த ரசிகர்கள் பாராட்டு!

vinoth
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (15:38 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் இன்று அதிக திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக். நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எதிர்பார்த்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

இன்று படம் வெளியாகியுள்ள நிலையில் பெருவாரியாக நேர்மறை விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. படத்தில் பிரசாந்தைவிடவும் தன்னுடைய வில்லத் தனமான நடிப்பால் சிம்ரன் மிரட்டியுள்ளதாகவும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிம்ரன் நடித்துள்ள கதாபாத்திரத்தை இந்தியில் தபு நடித்துக் கலக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்