கலவையான விமர்சனங்களைக் கடந்தும் முதல் நாளில் நல்ல வசூலை கொடுத்த VTK

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (15:40 IST)
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படத்துக்குப் பிறகு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் குறையாக அதிக நேரம் ஓடுவதும், இரண்டாம் பாதியில் ஆமை வேகத்தில் நகர்வதும் சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் ரிலீஸுக்கு முன்பே கௌதம் மேனன் படம் வேகமெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளும் என சொல்லியே ரசிகர்களை அதற்கேற்றார்போல தயார் செய்திருந்ததால், நிதானமாக செல்வதை ரசிகர்கள் ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் முதல் நாளில் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. வந்த எதிர்மறை விமர்சனங்களை வைத்துப் பார்க்கும் போது இது நல்ல வசூல் என்று சொல்லப்படுகிறது. இதே வசூல் தொடருமானால் படம் லாபம் ஈட்டும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்