வடிவேலுவின் சம்பளத்தைக் கேட்டு ஷாக் ஆன கே எஸ் ரவிகுமார்?

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (15:35 IST)
நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் வடிவேலு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதையடுத்து இப்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி எல்வின் நடிக்கும் படத்தில் அவரை நடிக்க வைக்க அணுகியுள்ளனர். ஆனால் அவர் ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருக்கு ஷாக் கொடுத்துள்ளாராம். இதனால் அவரை சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள சொல்லி பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்