வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கியப் பணியை முடித்த சிம்பு… அவரே வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (16:01 IST)
சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்துவரும் நிலையில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளார் சிம்பு. இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்