சிம்பு நடிக்கும் பட சூட்டிங் இன்று பூஜையுடன் தொடக்கம்....

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (16:57 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தி நடிகர் சிம்பு நடிக்கவுள்ள படம் மாநாடு. பாக்காவான அரசியலை மையப்படுத்தி உருவாகவுள்ள இப்படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தைத் தொடங்கும்முன் சுசீந்திரம் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் சூட்டிங் வெறூம் 35 நாட்களில் எடுத்து முடிப்பதாகத் தகவல் வெளியானது.

இந்தப் படத்தின் பூஜை ஆரம்பித்து இன்று முதல் ஹூட்டிங் நடந்து வருகிறது.  இதில் பாரதிராஜா சம்பந்தப்பட்ட காட்சிகள் நடைபெற்றன.

தற்போது கேரளாவில் உள்ள  சிம்பு வரும் 8 ஆம் தேதி படக்குழுவினருடம் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.
இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்