சிம்புவின் ’47 வது படம் ’அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (22:25 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவரது 47 வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
 

வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தை அடுத்து சில்லு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கவுள்ள முஃப்தி என்ற படத்தின் ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இப்டத்திற்காக 2 பாடல்கள் உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா  போன்ற படங்களை அடுத்து இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு ’சிம்பு47’ என்ற பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிக்கிறது. இப்படத்திற்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.  ஏ.ஆர்.ரஹ்மான் – சிம்பு- கெளதம் மேனன் ஆகிய மூவரும் இணையும் 3 வது படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நாளை மதியம் 12:15 மணிக்கு இப்படத்தின் தலைப்பு  வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்