2.0 ரஜினியுடன் திரையில் சிம்பு - மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (14:26 IST)
'செக்க சிவந்த வானம்' படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் சுந்தர் சி-யின் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு. 
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ‘நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். அதோடு கேத்ரின் தெரெஸா, ரம்யா கிருஷ்ணன், மஹத், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் நாளை வெளியாக உள்ள  '2.0' திரைப்படத்தோடு, 'வந்தா ராஜாவா தான் வருவேன்' திரைப்படத்தின் ட்ரைலரும் வெளியாகிறதாம். இதன் யூ ட்யூப் வெளியீடு பற்றி, லைகா புரொடக்ஷன் சார்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
"தலைவர் தரிசனத்துடன் சிம்புவும்  திரையில்" என்ற மகிழ்ச்சியில் தத்தளிக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்