2.0 படத்தை வெளியிட 3000 இணையதளங்களுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்

புதன், 28 நவம்பர் 2018 (08:49 IST)
ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' படத்தை திருட்டு தனமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 
 
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்,  ரஜினிகாந்த் மற்றும் அக்சயக்குமார் நடித்துள்ள '2.0' வரும் 29ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், படத்தை பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ள லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 
 
அந்த மனுவில், மிக பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள '2.0' படத்தை முறைகேடாக இணையதளத்தில் வெளியிடப்பட்டால் மிக பெரிய அளவில் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே முறைகேடாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், '2.0' படத்தை இணையதளத்தில் வெளியிட 3000 இணையதளத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்