’மாநாடு’ படத்தில் இணைந்த மூன்று பிரபலங்கள்: சுரேஷ் காமாட்சி அறிவிப்பு

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (18:20 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்த ’மாநாடு’ திரைப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி இன்று மாலை 6 மணி முதல் ஐந்து நிமிடத்திற்கு ஒரு அப்டேட் 7 மணி வரை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர், இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் நகைச்சுவை நடிகர் கருணாகரன் ஆகிய மூவரும் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
முதல் மூன்று அறிவிப்பே ஆச்சரியப்படும் வகையில் இருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அரசியல் படமான இந்த படத்தில் மேற்கண்ட மூவரும் அரசியல்வாதிகளாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவுக்கு இந்தப்படம் மிகப்பெரிய பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்