காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை: துரைமுருகன் பேட்டியால் பரபரப்பு

புதன், 15 ஜனவரி 2020 (15:21 IST)
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை திமுக-காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் திடீரென இரு இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டது 
 
கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் அறிக்கை விட்டது இந்த கூட்டணியின் பிளவிற்கு காரணமாக உள்ளது 
அதன் பிறகு ப.சிதம்பரம் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை சமாதானப்படுத்த முயன்றும் திமுக அதிருப்தி அடைந்து தற்போது கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? இருக்காதா? என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என டி ஆர் பாலு அவர்கள் கூறியதிலிருந்தே காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இணைத்து கொள்வதை திமுக விரும்பவில்லை என்றே எடுத்துக் கொள்ளப்பட்டது 
இந்த நிலையில் இன்று திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் வேலூரில் பேட்டி அளித்தார். எனவே நகராட்சி மாநகராட்சி தேர்தலில் இந்த கூட்டணி நீடிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பாக வரும் 2022ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பது சந்தேகமே என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்