இயக்குனர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் அதில் கார் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் மரணமடைந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இயக்குனர் பா.ரஞ்சித் தனது தங்கலான் படத்தை தொடர்ந்து அடுத்து இயக்கி வரும் படம் வேட்டுவம். இந்த படத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நாகப்பட்டிணம் மாவட்டம் விழுந்தமாவடியில் நடந்து வருகிறது. இந்த படத்திற்கான சண்டை காட்சி ஒன்று இன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கார் ஸ்டண்ட் மாஸ்டரான மோகன்ராஜ் என்பவர் காரிலிருந்து குதிக்கும்போது தவறி விழுந்ததாகவும், அப்போது அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக அவர் நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து அவரது உடல் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Edit by Prasanth.K