சிம்புவின் சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியில் திரையுலகம்!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (17:34 IST)
நடிகர் சிம்பு சுசிந்தரன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் சம்பளம் போக லாபத்தில் 10 கோடி ரூபாய் பங்கு என்ற அடிப்படையில் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரம் நடைபெறும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பாக சிம்பு சுசீந்திரன் இயக்கும் ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முதலில் இந்த படத்தை சிம்புவின் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. அதை வைத்து மாநாடு தயாரிப்பாளரிடம் இருந்து சிம்பு என் ஓ சி சான்றிதழும் வாங்கினார். ஆனால் இப்போது சிம்பு படத்தை தயாரிக்கவில்லை என சொல்லபடுகிறது. வேறொரு தயாரிப்பாளர் தயாரிக்க சிம்புவுக்கு 10 கோடி சம்பளமும் லாபத்தில் 40 சதவீதம் பங்கும் தரப்படும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் சிம்பு 15 கோடி ரூபாய் வரை சம்பாதிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இனி வரும் படங்களிலும் இது போன்ற ஒப்பந்தங்களை போட இருக்கிறாராம் சிம்பு.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்