இயக்குனர் சிறுத்தை சிவா தனது தம்பியான நடிகர் பாலாவுக்கு அண்ணாத்த படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தை அளித்துள்ளாராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்தது ‘அண்ணாத்த’ திரைப்படம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது .
ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும் அரசு படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் ரஜினியின் உடல்நிலை காரணமாக படப்பிடிப்பை சன் பிக்சர்ஸ் தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில் இப்போது படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க சிறுத்தை சிவா தனது தம்பியான நடிகர் பாலாவை தேர்ந்தெடுத்துள்ளாராம். ஏற்கனவே இவர் வீரம் பட்த்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இயக்குனர் வெங்கட் பிரபு தனது எல்லா படத்திலும் தம்பி பிரேம்ஜிக்கு வேடம் அளிப்பது போல இப்போது சிறுத்தை சிவாவும் ஆரம்பித்து விட்டாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.