சிம்பு-கெளதம் மேனன் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (21:57 IST)
சிம்பு மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணி புரிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன்னர் அந்த திரைப்படத்திற்கு ’நதியினிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படம் குறித்த மற்ற விபரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்