ஆற்றில் தீபம் விட்டு மகிழ்ந்த சிம்பு: வைரல் க்ளிக்ஸ்!!
சனி, 20 பிப்ரவரி 2021 (12:07 IST)
கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்ட சிம்புவின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிம்பு திடீரென உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பிரசித்திப் பெற்ற கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.