ரஜினி நடிக்க வேண்டிய படத்தில் சிம்பு? பரபரப்பு தகவல்

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (22:04 IST)
உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ஒரு திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் பூஜை மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் மார்ச் 10ஆம் தேதி ஆகியும் இது குறித்த எந்தவித தகவலும் வெளிவராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருக்கும் திரைப்படம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை அடுத்து ரஜினிக்காக தயார் செய்து வைத்திருந்த கதையில் சிம்பு நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை கமலஹாசன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இது குறித்து சிம்புவிடம் கதைசொல்லி லோகேஷ் கனகராஜ் உறுதி செய்து விட்டதாகவும் மாஸ்டர் திரைப்படம் வெளியான பின்னர் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்தவுடன் அவர் லோகேஷ் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது
 
சிம்பு நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வடிவேலு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ’கைதி’ திரைப்படம் போல ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்