கேளுங்க.... சில்லுக் கருப்பட்டி' படத்தின் புதிய பாடல் 'அகம் தானய்'

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (16:58 IST)
சமுத்திரக்கனி, சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள `சில்லுக் கருப்பட்டி' படத்தில் இருந்து 'அகம் தானய்' வீடியோ பாடல்  வெளியாகியுள்ளது.


 
`பூவரசம் பீப்பீ' படத்தை இயக்கிய ஹலீதா ஷமீன்  `சில்லுக் கருப்பட்டி' என்ற பெயரில் நான்கு விதமான காதல் கதைகளை மையப்படுத்தி புதிய படத்தை உருவாக்கியுள்ளார். இதில் சமுத்திரக்கனி, சுனைனா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுடன்  `ஓகே கண்மணி' படப் புகழ் லீலா சாம்சன், `தெய்வத்திருமகள்' சாரா அர்ஜூன், காலா மணிகண்டன் ஆகியோரும் நடிக்கின்றனர். பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.
 
மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என நான்கு ஒளிப்பதிவாளர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர். தற்போது இப்படத்தில் இருந்து அகம் தானய் பாடல் வெளியாகி உள்ளது.  
 
வீடியோ லிங்க்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்