குறும்பட இயக்குனருக்கு பிறந்தநாள் விழா!

J.Durai

சனி, 8 ஜூன் 2024 (10:29 IST)
ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனர் ஜெ.விக்டர் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 
 
செய்யது ஆரீப் தலைமையிலும், மேக்கப் ஆர்டிஸ்ட் & நடிகை ப்ரியா, மீனா, ஆசிரியை கிருபா ஆகியோர் முன்னிலையிலும், ரேஷ்மா (எ) ரேணுகாதேவி மெழுகுவர்த்தி ஏற்றி  குறும்பட இயக்குனரும், நடிகரும், டாக்டர் ஜெ.விக்டர் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
 
வழக்கறிஞர் லதா, ஈஷா ஹேர் நிறுவனர் ஜோதி, எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் மீசை மனோகரன், அப்பா பாலாஜி, விஜய் டிவி பாலா, ஆசிரியரும், நடிகருமான மோகன் தென்னரசு, தவழும் மாற்றுத் திறனாளி தலைவி எம்.ராவியத் பேகம், ஐயப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
 
விழாவில், குமரேசன்,வைஷ்ணவி,மல்லிகா, காஞ்சனா, மகாலெட்சுமி, மாற்றுத்திறனாளி தனலட்சுமி,நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா இணைந்து விழா ஏற்பாடுகளை செய்தார்கள்.
 
இதனை தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு  வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்