3 நிமிட ப்ரமோஷனுக்கு 1 கோடி ரூபாய் செலவு செய்த மகாராஜா படக்குழு…!

vinoth

சனி, 8 ஜூன் 2024 (08:57 IST)
2017 ஆம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை திரைப்படம் மூலமாக கவனம் பெற்ற இயக்குனர் நித்திலன், தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா  படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கி இறுதியில் முடிவடைந்தது. ஆனால் பல காரணங்களால் ரிலீஸ் ஆகிறது. இது விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. ஷூட்டிங் முடிந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக ரிலீஸ் ஆகாமல் இருந்த இந்த படம் இப்போது ஜூன் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலர் உலகின் மிக உயரமான கட்டிடம் என சொல்லப்படும் புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்டது. இந்த மூன்று நிமிட ப்ரமோஷனுக்காக படக்குழு சுமார் 1 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்