அஜித் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் - கோவில்களில் சிறப்பு பூஜை செய்து ரசிகர்கள் அன்னதானம்..

J.Durai

புதன், 1 மே 2024 (15:34 IST)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இளைஞர் அணி அஜித் நற்பணி இயக்கத்தின் சார்பாக தொடர்ந்து நடிகர் அஜித் அவர்களின் பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் தினத்தையும் முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அஜித் பெயரில் சிறப்பு அர்ச்சனை ஆராதனைகள், அபிஷேகம் போன்றவை செய்து வருகின்றனர். 
 
அதன்படி இந்த ஆண்டும் நடிகர் அஜித்குமார் அவர்களின் 53வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது நற்பணி இயக்கத்தின் செயலாளர் சுரேஷ் தலைமையில் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து அம்மனுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு அஜித் பெயர் மற்றும் ராசிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து அவரது ரசிகர்கள் அவர் பல்லாண்டு வாழ பிரார்த்தனை மேற்கொண்டு வழிபட்டனர்.
 
தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கினர்.  
 
இதே போல் ராசிபுரம் நற்பணி இயக்கம் அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களில் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களின் வெயிலின் தாக்கத்தை குறைக்க நீர்மோர், குளிர்பானங்கள், இளநீர் போன்றவை வழங்கி சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் அனைத்து அஜித் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்