சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (19:01 IST)
சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் ‘குக் வித் கோமாளி’
‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருக்கும் புகழ் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதைப் பார்த்தோம். இந்த நிலையில் அடுத்ததாக ஷிவாங்கியும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் திரைப்படம் ’டான்’. சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் நான்கு நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது 
 
விஜே விஜய், ஷிவாங்கி, முனிஸ்காந்த் மற்றும் காளி வெங்கட் ஆகிய நால்வரும் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக சற்று முன்னர் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கு கொண்டிருந்த ஷிவாங்கி முதன்முதலாக சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் சமீபத்தில் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விருந்தினராக வந்திருந்த சிவகார்த்திகேயன் ஷிவாங்கியின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்