விஷாலின் 'இரும்புத்திரை 2' படத்தில் அஜித் பட நாயகி!

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (09:45 IST)
விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. விஷால் தற்போது சுந்தர் சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து 'இரும்புத்திரை 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படத்தின் நாயகி ஷராதா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார். ஷராதா ஸ்ரீநாத் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் அவருக்கு இந்த படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த படத்தில் முதல்பாகத்தை போலவே விஷால் இந்த இரண்டாம் பாகத்திலும் ராணுவ வீரராக நடிக்கவுள்ளார்.
 
இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்கவுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விஷால் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்