'தளபதி 63' படத்திற்காக நான்கு டைட்டில்கள் ரெடி! ஜூன் 22ஆம் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (09:15 IST)
தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக போடப்பட்டுள்ள பிரமாண்டமான கால்பந்து மைதான செட்டில் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து படக்குழுவினர் இரண்டு பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்லவுள்ளனர்
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் அன்று அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது அன்றைய தினம் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்திற்காக நான்கு டைட்டில்களை இயக்குனர் அட்லி தேர்வு செய்து வைத்துள்ளாராம். வெறி, வெறித்தனம், மைக்கேல், கேப்டன் மைக்கேல்' ஆகிய நான்கு டைட்டில்களில் ஒன்றை விஜய் தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தில் அவருடைய கேரக்டரின் பெயர் மைக்கேல் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெறி, மெர்சல் ஆகிய மாஸ் டைட்டிலை அடுத்து விஜய்-அட்லி இணையும் இந்த படத்திற்கும் நிச்சயம் டைட்டில் மாஸாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்