ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ்?

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (16:59 IST)
நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாகியுள்ளதை அடுத்து,  அப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

ஒருகாலத்தில் பிரபல கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷாகிலாவின் படங்கள்.  தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தை வெளியிட படக்குழு ஆர்வமாக உள்ளது.

ஆனால இது கொரொனா காலக்கட்டம் என்பதால்  ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக அதன் இயக்குநர் இந்திரஜித்  தெரிவித்துள்ளார்.

ஷகிலாவின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளவர் பாலிவுட் நடிகை ரிச்சா சதா, இப்படம் ஷகிலா நாட் பார்ன் ஸ்டார் என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் விரைவாக வெளியான உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்