பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸான அவரின் பதான் 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது. அதையடுத்து சமீபத்தில் ரிலீஸான அவரின் ஜவான் திரைப்படம் 10 நாட்களில் 700 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்துள்ள நிலையில் அவரின் டன்கி திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என ஷாருக் கான் அறிவித்துள்ளார்.
இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் திரைப்படத்துக்கு டன்கி என்று தலைப்பு வைக்கப்பட்டு வெளிநாடுகளில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்தின் மூலம் இந்த ஆண்டு ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா ஷாருக் கான் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.