விஜய்யுடன் அடுத்த படம் எப்போது? இயக்குனர் அட்லி அளித்த பதில்!

வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (14:30 IST)
ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படம் இதுவரை சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ள நிலையில் இயக்குனர் அட்லியின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் மும்பையில் ரசிகர்களோடு இணைந்து படம் பார்த்த அட்லியிடம் ”இந்தி ரசிகர்கள் விஜய்யை மிஸ் செய்கிறார்கள், அவருடன் மீண்டும் எப்போது படம் பண்ணுவீர்கள்?” எனக் கேட்க, அதற்கு அட்லி ”விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவோம்” எனக் கூறியுள்ளார். இதனால் விரைவில் அட்லி- விஜய் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்