ஜவான் படத்தில் பணியாற்றிய 6 ஸ்டண்ட் இயக்குனர்கள் !

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (09:46 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ் இயக்குனர் மற்றும் தமிழ் நடிகர்கள் பட்டாளம் இருப்பதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் விநியோக உரிமை 16 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷாருக்கானின் படங்களிலேயே அதிக தொகைக்கு தமிழகத்தில் விற்கப்பட்ட படமாக ஜவான் அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் 6 ஸ்டண்ட் இயக்குனர்கள் பணியாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6 வெவ்வேறு விதமான சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த படத்தில் ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்