ஜவான் படத்துக்கு கேரளாவிலும் இவ்வளவு டிமாண்ட்டா?

ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (09:27 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்த படத்தின் விநியோக உரிமையை கோகுலம் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் இயக்குனர் மற்றும் தமிழ் நடிகர்கள் பட்டாளம் இருப்பதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் விநியோக உரிமை 16 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷாருக்கானின் படங்களிலேயே அதிக தொகைக்கு தமிழகத்தில் விற்கப்பட்ட படமாக ஜவான் அமைந்துள்ளது.

அதே போல கேரள விநியோக உரிமையையும் இதே கோகுலம் பிலிம்ஸ் நிறுவனமே 7 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். கேரளாவில் இவ்வளவு மிகப்பெரிய தொகைக்கு ஷாருக் கான் படம் வாங்கப்பட்டிருப்பது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்