ஒரே ஆண்டில் 2 படங்களில் ரூ.1000 கோடி வசூலீட்டிய ஒரே நடிகர் ..ரசிகர்கள் கொண்டாட்டம்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (18:59 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார்  ஷாருக்கான். இவர்,  இயக்குனர்  அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது.. 

ஜவான் படம் தியேட்டரில்  ரிலீஸாகி 19 ஆவது நாள் ஆகும் நிலையில்,  ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில்  1000 கோடி ரூபாய் வசூலை தொட்ட முதல் தமிழ் இயக்குனர் என்ற சாதனையை அட்லீ படைத்துள்ள நிலையில், இந்திய சினிமாவில்  ஒரே ஆண்டில் 2 படங்களிலும்  தலா ரூ.1000 கோடி வசூல் ஈட்டிய ஓரே நடிகர்  என்ற சாதனையை சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பெற்றுள்ளார்.

அவருக்கு பலரும் வாழ்த்துகள் கூறிவருகின்றனர். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜவான் படத்தில் தமிழ்  நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்