'கலக்க போவது யாரு' ஃபைனலில் சந்தானம் தரும் சர்ப்ரைஸ்

Webdunia
புதன், 24 மே 2017 (22:41 IST)
விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு காமெடி நடிகராக வந்து இன்று ஹீரோவாக புரமோஷன் ஆகியுள்ளவர் நடிகர் சந்தானம். இன்று சந்தானத்தின் ரேஞ்சே வேற என்றாலும் தனக்கு வழிகாட்டிய விஜய் டிவியை அவர் என்றும் மறந்ததில்லை. எப்போது கூப்பிட்டாலும் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.



 


இந்த நிலையில் விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'கலக்க போவது யாரு?. இந்த நிகழ்ச்சியின் ஃபைனல் வரும் 27ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சந்தானம் கலந்து கொள்கிறார்.

அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியின் இடையில் அதாவது சரியாக இரவு 8 மணிக்கு சந்தானம் நடித்து விரைவில் வெளிவரவுள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் டிரைலரை வெளியிட சந்தானம் திட்டமிட்டுள்ளார்.

சந்தானம், வைபவி, நாகேஷ் பேரன் பிஜேஷ், ராதாரவி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்