ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்த செல்வராகவன் ..

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (22:53 IST)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தமிழ், இந்தி மொழிகளைக் கடந்து, ஹாலிவுட்டிற்கும் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில், மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகர்ளின் நடிப்பில், லைகா தயாரிப்பில் வெளியானது.

இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி ரோஜா படத்தில் இருந்து பயணிக்கும்  நிலையில், இவர்களின் காம்போவில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வம் பாடல்களும் கவனம் பெற்றது.

இதுகுறித்து, இயக்குனர் செல்வராகவன் தன் டுவிட்டர் பக்கத்தில், என் அனுபவத்தில், மணிரத்னம்- ஏ.அர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியாகும் பாடல்கள்  சிறந்தவையாக இருக்கும். அந்த வகையில் பொன்னியின் செல்வன் பட இசையும் அற்புதமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்